ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மேஜிக்கல் டீ இது!

தேவையானப் பொருட்கள்: பெரிய நெல்லிக்காய் - 1, புதினா இலைகள் - 4 , ஓமம் - 1 டீஸ்பூன், இஞ்சி - 1 சிறிய துண்டு.

நறுக்கிய நெல்லிக்காய், புதினா இலைகள், இஞ்சி மற்றும் ஓமம் ஆகியவற்றை இரண்டு டம்ளர் தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

தண்ணீர் பாதியாக வற்றும் வரை கொதிக்க விட வேண்டும்.

பின், வெதுவெதுப்பான அல்லது தேவையானளவு சூட்டில் இதை வடிக்கட்டி தினமும் காலை குடிக்கவும்.

கிரீன் டீயை விட, இந்த மேஜிக்கல் டீயில், ஆன்டிஆக்சிடன்கள், வைட்டமின் சி உட்பட ஏராளமான ஊட்டச்சத்துகள் கொட்டிக் கிடப்பதால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது உதவும்.

நெல்லிக்காயில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும், சருமத்தை இளமையாக வைக்கவும் உதவும்.

நெல்லிக்காயிலுள்ள பைட்டோகெமிக்கல்களுக்கு புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.

ஓமம், செரிமானத்துக்கு உதவுவதுடன், வயிறு உப்புசம், அஜீரணம் போன்றவைக்கு நிவாரணம் தருகிறது.

குறிப்பாக அனைத்து பொருட்களும் கிச்சனிலேயே இருக்கும் என்பதால், இந்த மேஜிக்கல் டீயை தயாரிப்பதும் எளிதானதே. அதேவேளையில், டாக்டரிடம் கலந்தாலோசித்து உட்கொள்ள வேண்டும்.