நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலை உணவுக்கான டயட் இது
உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் தற்போது பலரும் வயது வேறுபாடின்றி நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக தினமும் மருந்து, மாத்திரைகள் எடுக்கக்கூடிய சூழலில், உணவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தினால் நீரிழிவு பாதிப்பை கட்டுக்குள் வைக்க முடியும்.
அதேவேளையில், மருந்துகள் உட்கொள்வதை முற்றிலும் நிறுத்தி விடக்கூடாது.
அதன்படி, காலை உணவில் கட்டாயமாக புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் காலை உணவை சத்துகள் நிறைந்ததாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
சுண்டல், முளைகட்டிய பயிறு வகைகள், நார்ச்சத்து மிகுந்த பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் இரண்டு முட்டை ஆகியவற்றை சாப்பிடலாம்.
பாதாம் பருப்பு, வேர்க்கடலை ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
புதிதாக இதை உட்கொள்ளும் போது, பசி உணர்வு முழுமையடையாது. எனவே, இவற்றுடன் சிறுதானிய பொங்கல், வரகு அரிசி உப்புமா போன்றவற்றை சேர்க்கலாம்.