25வது ஆண்டில் விஜய், சிம்ரன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும்
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் எழில் இயக்கத்தில் , விஜய், சிம்ரன் மற்றும் பலர் நடிப்பில் 1999ல் ஜன 29ம் தேதி வெளிவந்த படம் 'துள்ளாத மனமும் துள்ளும்'.
இன்றுடன் இப்படம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆகிறது.
“பூவே உனக்காக, லவ் டுடே, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி,” ஆகிய படங்கள் விஜய்யின் மறக்க முடியாத காதல் படங்கள்.
குட்டி கதாபாத்திரத்தில் விஜய், ருக்கு கதாபாத்திரத்தில் சிம்ரன், மணி கதாபாத்திரத்தில் மணிவண்ணன் என பல நினைவுகளை இப்படம் இத்தனை வருடங்களுக்குப் பின்பும் சுமந்து நிற்கிறது.
எஸ்ஏ ராஜ்குமார் இசையில், “தொடத் தொடவெனவே, இன்னிசை பாடி வரும், இருபது கோடி, மேகமாய் வந்து போகிறேன்” ஆகிய பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்.
200 நாட்களைக் கடந்து ஓடிய படங்களில் இப்படமும் ஒன்று. விஜய்யின் மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்று.
தெலுங்கில் நாகார்ஜுனா, சிம்ரன் நடிக்க 'நுவ்வு வஸ்தாவனி' என்ற பெயரில் ரீமேக்காகி அங்கும் பெரிய வெற்றியைப் பெற்றது.