தைராய்டு என்பது பட்டாம்பூச்சி வடிவத்துடன் கழுத்தில் உள்ள ஒரு சுரப்பி. 'ட்ரையோடோதைரோனைன்' மற்றும் 'தைராக்ஸின்' ஹார்மோன்களை, அயோடின், அமினோ அமிலம் டைரோசின் ஆகியவை இணைந்து சுரக்கின்றன.
இவை ரத்தத்தில் கலந்து உடலின் பல்வேறு உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு செல்கின்றன. தைராய்டு கோளாறில், பல்வேறு வகைகள் உள்ளன. அதைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை செய்ய வேண்டும்.
குழந்தைகளில் மூளை வளர்ச்சி, பெரியவர்களில் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை தீர்மானிப்பதில் தைராய்டு ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது.
தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பதால் வரும் ஹைப்போ தைராய்டிசம், ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் பாதிக்கும்.ஹைப்போ தைராய்டிசம் இருந்தால் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் வராது.
களைப்பு, சோர்வு, மலச்சிக்கல், வறண்ட சருமம், எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும். இதற்கு, லெவோதைராக்ஸின் மாத்திரைகள் தரப்படுகிறது.
அதிகமாக சுரப்பது ஹைப்பர் தைராய்டிசம். படபடப்பு, வயிற்றுப்போக்கு, எடை குறைவது, அதிகமான வியர்வை அறிகுறிகள் காணப்படும். இதற்கு மருந்துகள், கதிரியக்க அயோடின், அறுவை சிகிச்சை தேவைப்படும்.
தைராய்டு சுரப்பியில் வட்டமான, முட்டை வடிவ வளர்ச்சியால் எற்படும் தைராய்டு முடிச்சுகள். இவை எந்த பாதிப்பையும் தராது.
கழுத்தில் கட்டி , விழுங்குவதில், சுவாசிப்பதில் சிரமம், குரல் கரகரப்பு இருக்கும்.'பயாப்ஸி' செய்து, அதன் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை செய்யப்படும்.