தோசை மாவு புளிக்குதா? இட்லிக்கு மாவு புளிக்கலையா? டிப்ஸ்.. டிப்ஸ்…
மாவுக்கு உப்பை போடாமல் வைத்திருந்து, தேவையான அளவு எடுத்து உப்பு சேர்த்து கரைத்து, தோசை வார்க்கலாம். இப்படி செய்வதால் மாவு புளிக்காமல் இருக்கும்.
தோசை மாவு புளித்திருந்தால் சிறிதளவு சாதத்தை மிக்சியில் அரைத்து மாவுடன் கரைத்து கொள்ளலாம்.
ரொம்ப புளித்த மாவுடன் வெங்காயம், இஞ்சி, கீரை இவைகளை நறுக்கி சேர்த்து ஊத்தப்பம் செய்யலாம் அல்லது பணியாரம் செய்யலாம்.
புளித்த மாவில் சிறிதளவு அரிசி மாவு அல்லது பால் சேர்த்து தோசை வார்த்தால் அந்த அளவுக்கு புளிப்பு உங்களுக்கு தெரியாது. சாப்பிட நன்றாக இருக்கும்.
இட்லி செய்ய மாவு புளிக்க வேண்டுமா?.. அரைத்த புதிய மாவின் மேல் ஒரு தட்டு போட்டு மூடி, வெயிலில் அரை மணி நேரம் வைக்கவும். சிறிய சிறிய முட்டைகள் எழும்பி மாவு புளிக்க தொடங்கி விடும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்துவிட்டு, அடுப்பை அணைத்து விடவும். அரை மணி நேரம் மாவு பாத்திரத்தை குக்கருக்குள் வைத்துப் பார்த்தால் மாவு லேசாக பொங்கி புளித்து வந்திருக்கும்.
அரைத்த மாவுக்கு மேலே 2,3 வரமிளகாயை காம்புகளோடு போட வேண்டும். பின் பாத்திரத்தை மூடி போட்டு விட்டால், மாவு 1 மணி நேரத்தில் நன்றாக புளித்து பொங்கி வரும்.