நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கால் புண்களை சமாளிக்க டிப்ஸ்

40 வயதை கடந்து விட்டாலே சர்க்கரை அளவு குறித்து மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

உடலில் சர்க்கரை அதிகளவு இருக்கும் பட்சத்தில், பாதத்தில் புண் ஏற்படும். பாதத்தை அடிக்கடி கண்காணித்து, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சரியான அளவில் செருப்பு அணிய வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குப் பின் செருப்பை மாற்றி விட வேண்டும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு பாதத்தில் புண் ஏற்பட்டால் ஆரம்பகட்டத்திலேயே டாக்டரை அணுகி தேவையான சிகிச்சை எடுத்தால் குணப்படுத்த முடியும்.

சரியான அளவில் உடற்பயிற்சி மேற்கொண்டு, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து, உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.