பல் கூச்சத்தை தவிர்க்க டிப்ஸ் டிப்ஸ்!
பல் வலியை விட, கூச்சம் மிகவும் தொல்லை தரும் பிரச்னை. பல் கூச்சம் என்பது ஒரு பொதுவான பிரச்னை மற்றும் உலகில் உள்ள மக்களில் 70 சதவீதம் பேர், இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சூடான, மிகவும் குளிர்ந்த உணவு அல்லது மிகவும் இனிப்பான மற்றும் புளிப்பான உணவுகளை சாப்பிட்டால், பல் கூச்சம் ஏற்படும். சில சமயம், நீர் அருந்தினால் கூட இந்த கூச்சம் உண்டாகும்.
அதிகளவு இனிப்பு, சாக்லேட், ஐஸ்கிரீம், அமில உள்ளடக்கம் கொண்ட உணவுகள், கோலா போன்ற பானங்கள், பற்களில் உள்ள எனாமலை குறைத்து, பல் கூச்சத்துக்கு வழி வகுக்கிறது.
தினமும் பல் துலக்கியதும், வெதுவெதுப்பான நீரில், கல் உப்பு சேர்த்து கரைத்து, ஈறுகளில் படுமாறு சில நிமிடங்கள் வைத்து, வாய் கொப்பளித்தால் பிரச்னையில் இருந்து விடுபடலாம்.
கிராம்பு எண்ணெயை, ஈறுகளில் மெதுவாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்; தினமும் இருதடவை செய்யலாம்.
கொய்யா இலைகளில் அதிக ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. கிருமிகளை எதிர்த்து போராடும்; கூச்சம் கட்டுப்படும். தினமும், இரண்டு கொய்யா இலைகளை, மென்று தின்று வரலாம்.
சிட்ரஸ் வகை உணவுகள் பல் கூச்சம் இருக்கும் போது குறைவாக எடுத்துக் கொள்ளவேண்டும். கார்பனேட்டட் குளிர்பானங்களையும் தவிர்ப்பது நல்லது.
இதுமட்டுமல்லாது அதிக நேரம் பல் துலக்கினாலும், பல் எனாமல் போய் விடும். பல்கூச்சம் அதிகரிக்கும். புதினா கலந்த டூத் பேஸ்டை உபயோகித்தால், ஈறுகளுக்கு புத்துணர்ச்சி தரும்; பல் கூச்சமும் குறையும்.