விழாக்களில் ஜொலிக்க.. ஆடைக்கேற்ற ஆபரணம்...

பொதுவாக ஒரு விசேஷத்திற்கு செல்லும்போது ஆடையை தேர்ந்தெடுப்பதில் காட்டும் ஆர்வத்தை, அதற்கு பொருத்தமான ஆபரணங்களை தேர்ந்தெடுப்பதில் சிலர் காட்டுவதில்லை.

சரியான ஆடைக்கு சரியான கம்மல், செயின் அணிந்தால், கூட்டத்தில் நீங்கள் தனித்து ஜொலிக்கலாம் என ஆடை வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்

நீங்கள் மென்மையான நிறங்களை விரும்புகிறவர் என்றால், உங்களுக்கு சில்வர் ஆபரணங்களே சிறந்த ஜோடி.

நீலம் (Blue), கிரே (Grey), பிங்க் (Pink) நிற ஆடை அணியும்போது, அதனுடன் சில்வர் கம்மல் அல்லது செயின் அணிந்து பாருங்கள்.

இது உங்கள் தோற்றத்திற்கு 'ரிச்' லுக் கொடுக்கும். குறிப்பாக, மாலை நேர பார்ட்டிகளுக்கு இந்த காம்பினேஷன் செம மாஸ் ஆக இருக்கும்.

சிவப்பு (Red), பிரவுன் (Brown) மற்றும் பச்சை (Green) போன்ற அடர் நிற ஆடைகளை அணியும்போது, தங்கம் அல்லது தங்க நிற ஆபரணங்கள் உங்கள் முகத்திற்கு தனி பொலிவை தரும்.

குறிப்பாக திருமண விழாக்கள் அல்லது பாரம்பரிய நிகழ்வுகளுக்கு இது 'பெஸ்ட் சாய்ஸ்'