வாழக்கூடிய நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 5 நகரங்கள் : வியன்னா முதலிடம்
'எகானமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட்' என்ற நிறுவனம் சார்பில் உலகில் வாழக்கூடிய நகரங்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
சுகாதார வசதி, கல்வி, ஸ்திரத்தன்மை, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதில், ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் முதலிடம் பிடித்துள்ளது. டென்மார்க்கின் கோபன்ஹகென் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி 3 மற்றும் 4வது இடத்தில் உள்ளது.
முதல் 10 இடங்களுக்குள் கனடாவின் கல்கரி, வான்கூவர் மற்றும் டொரன்டோ ஆகிய நகரங்கள் உள்ளன. 10வது இடத்தில் ஜப்பானின் ஒசாகா நகரம் உள்ளது.
இந்தியாவின் பெங்களூரு, ஆமதாபாத், சென்னை, புதுடில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இவை, பட்டியலில் 60வது இடத்துக்கு மேல் உள்ளன.
பட்டியலின் கடைசி மூன்று இடங்களில் அல்ஜீரியாவின் அல்ஜைர்ஸ், லிபியாவின் டிரிபோலி, சிரியாவின் டமாஸ்கஸ் ஆகிய நகரங்கள் உள்ளன.