ஆன்மிக சுற்றுலாவிற்கு ஏற்ற ஹரித்வார், ரிஷிகேஷ்!
உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கிறது, ஹரித்வாரும் ரிஷிகேஷும். கங்கை நதி, இந்தியாவிற்குள் ஹரித்வாரின் வழியாகத்தான் நுழைகிறது.
அதனால் தான் இதை, ஹரி - துவாரம் - கடவுளின் வழி என்கின்றனர். ஆன்மிக சுற்றுலாவிற்கும், இயற்கையை ரசிப்பதற்கும் ஏற்ற இடம்.
ஹிந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான இது, கடல் மட்டத்தில் இருந்து, 314 மீட்டர் உயரம் இருப்பதால், வெயில் காலத்திலும், குளுகுளுவென்று இருக்கும்.
இங்கு இருக்கும் பெரும்பாலான தங்கும் விடுதிகள், கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கின்றன. நீங்கள் ஹோட்டலை விட்டு இறங்கினாலே, கங்கை நதியில் குளிக்கலாம்.
இங்கிருந்து, 25 கி.மீ., துாரத்தில் இருக்கிறது, ரிஷிகேஷ். இங்கு, ராம் ஜூலா, லக்ஷ்மண் ஜூலா என, கங்கையின் குறுக்கே அமைந்திருக்கும், தொங்கும் பாலங்கள் மிகவும் புகழ்பெற்றவை.
வெளிநாட்டினரை வெகுவாக கவருவது, 'ரேப்டிங்' என்று சொல்லப்படும், சாகசப் படகுப் பயணம்.
இங்கு சுத்தமான மூலிகைத் தைலம் மற்றும் ருத்ராட்சங்கள் கிடைக்கின்றன.
சென்னையில் இருந்து ஹரித்வாருக்கு, டேராடூன் எக்ஸ்பிரஸ் உள்ளது. விமானம் எனில், டில்லிக்கோ, டேராடூனிற்கோ வரவேண்டும். அங்கிருந்து பஸ், ரயில் அல்லது கால் டாக்சியில் போகலாம்.