குட்டி தீவில் மண்டகட்டே பறவைகள் சரணாலயம்!

நகரங்களில் வாகனங்களின் சத்தம், இரைச்சல் நம் காதுகளில் வலியை ஏற்படுத்தும். ஆனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிவமொக்கா மாவட்டத்தின் மண்டகட்டே கிராமத்தினர் கொடுத்து வைத்தவர்கள்.

இங்கு 1.14 ஏக்கரில் அமைந்துள்ள குட்டித் தீவில், பல வெளிநாட்டு பறவைகள் முகாமிட்டு, அவை எழுப்பும் சத்தம் காதுகளுக்கு ரீங்காரமாக ஒலித்து, புத்துணர்ச்சியை அளிக்கும்,

சோலாபூர் - மங்களூரு நெடுஞ்சாலை அருகில், துங்கா நதி பாய்வதால், பறவைகள் கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்ய ஏற்ற சூழ்நிலையை அளிக்கிறது.

மே மாதத்தில் இனப்பெருக்க நோக்கத்துக்காக உலகம் முழுவதும் இருந்தும் ஏராளமான பறவைகள் மண்டகட்டேவுக்கு வருகின்றன.

இங்கு டார்ட்டர்ஸ், மீடியன் எக்ரெட்ஸ், கார்மோரண்ட்ஸ், மெய்டன் எக்ரட், பீய்டு கிங்பிஷர், வூலி நெக் ஸ்டாக், உட்பட பல வகையான பறவைகள் வருகின்றன.

உயரமான இடத்தில் நின்று பார்க்கும் வகையில், கண்காணிப்பு கோபுரமும் கட்டப்பட்டு உள்ளது. பறவைகளை அருகில் சென்று பார்க்கும் வகையில், படகு சவாரியும் இருக்கிறது.

ரயிலில் செல்வோர் ஷிவமொக்கா ரயில் நிலையத்தில் இறங்கியும்; பஸ்சில் செல்வோர், ஷிவமொக்கா பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ், டாக்சியில் செல்லலாம்.