பாரம்பரிய பனையோலை கொழுக்கட்டை
தேவையானப் பொருட்கள்: அரிசி மாவு - 2 கப், வெல்லம் அல்லது கருப்பட்டி தூள் - 1 கப்.
தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய் தூள், சுக்கு பொடி - தலா அரை டீஸ்பூன், பனை இலைகள் - தேவைக்கேற்ப.
ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீரை ஊற்றி, வெல்லம் அல்லது கருப்பட்டியை பொடியாக்கி, நன்றாக கொதிக்க விட்டு, வடிகட்டி கொள்ளவும்.
வேறொரு பாத்திரத்தில் அரிசி மாவு, தேங்காய் துருவல், சுக்கு துாள், ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின், சிறிது சிறிதாக வெல்லக் கரைசலை சேர்த்து, மாவை சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.
சுத்தம் செய்த பச்சை பனை ஓலைகளில், கொழுக்கட்டைக்காக பிசைந்து வைத்துள்ள மாவை வைக்கவும். மாவு வெளியே வரமாலிருக்க, நுாலால் ஓலையை சுற்றி கட்டவும்.
பின், ஒரு இட்லி தட்டில் வைத்து 15 - 20 நிமிடங்களுக்கு நீராவியில் வேக வைத்து எடுத்தால், பாரம்பரிய சுவையில் பனையோலை கொழுக்கட்டை ரெடி.