டிரிஸ்டன் டா குன்கா... உலகின் தனிமையான தீவு இது !

அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது 'டிரிஸ்டன் டா குன்கா' தீவு; பிரிட்டன் கட்டுப்பாட்டிலுள்ளது.

இதன் பரப்பளவு 207 சதுர கி.மீ., மக்கள் தொகை 221.

இந்த தீவை சுற்றி குறைந்தது 2500 கி.மீ., துாரத்துக்கு, மக்கள் வாழும் பகுதியே இல்லை.

இது உலகின் தனிமையான தீவு என அழைக்கப்படுகிறது.

இத்தீவுக்கு விமானம், ஹெலிகாப்டர் வசதி கிடையாது. கப்பல் பயணம் மட்டுமே உள்ளது.

தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரிலிருந்து கப்பல் இயக்கப்படுகிறது. துாரம் 3179 கி.மீ.,

இத்தீவுக்கு அருகிலுள்ள (2434 கி.மீ.,) மக்கள் வாழும் பகுதி செயின்ட் ஹெலீனா தீவு.