சடலங்களுடன் சாதாரணமாக வாழும் இந்தோனேஷிய மலைவாழ் மக்கள்!
தங்களின் முன்னோர்கள் இறந்தாலும், அவர்களுடனான அன்பு காரணமாக அந்தப் சடலத்துடன் வாரக் கணக்கில் வீட்டில் இருக்கின்றனர்.
இவர்கள் இந்தோனேசியாவில் உள்ள 'சலோவேசி' (sulawesi) என்ற மலைகளில் வசிப்பவர்கள்.
ஒருவேளை அவர்களிடம் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு போதுமான பணம் இல்லை என்றால் அதற்கான நிதி வசதி பெறும் வரை இறந்தவரின் உடலை வீட்டில் வைத்து பாதுகாத்து பின்னர் அதை பெரும் விழா போல சிறப்பித்து அடக்கம் செய்வர்.
இது பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தாலும், அவர்கள் இறந்த உடல்களை கண்டு பயப்படுவதில்லை. இறந்தவர்கள் மீதான அன்பு எங்களின் பயத்தை விட அதிகம் என்கின்றனர்.
மூதாதையர்களை கவுரவிப்பதற்காக 'மானின்' (Ma'nene festival) திருவிழா என்ற ஒன்றையும் கொண்டாடுகின்றனர்.
இந்த 'மானின்' திருவிழா மூன்று வருடத்திற்கு ஒரு முறை 'டானா டொராஜா' பகுதி மக்களால் கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவில் டொராஜா இனமக்கள் புதைத்த மூதாதையர்களின் உடலை தோண்டி அதனை சுத்தம் செய்து உலர வைத்து, நன்றாக உலர்ந்த பிறகு அவர்களுக்கு அழகாக உடை அணிவித்து, மீண்டும் அவர்கள் வந்தது போல் கொண்டாடுகின்றனர்.
இந்த கலாசாரம் சுமார் நூறு வருடம் பழமை வாய்ந்தது.