ரசம், மோரில் கறிவேப்பிலையை சேர்த்துப் பாருங்க... உடல் புத்துணர்ச்சி பெறும் !
கறிவேப்பிலையில், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி மற்றும் இ உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
கறிவேப்பிலை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு சீராகி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்து நீரிழிவை குறைப்பதில் பங்கு வகிக்கிறது.
இது செரிமானத்தை அதிகரிக்கிறது. உடலில் சேரும் கெட்ட கொழுப்பை குறைப்பதால், உடல் எடை குறைய உதவுகிறது.
இளநரை மற்றும் கூந்தல் உதிர்வை தடுக்கிறது, மேலும், மெலிந்த கூந்தலுக்கு வலிமையை சேர்க்கிறது.
பாக்டீரியா மற்றும் நுண்ணுயிர்களை எதிர்க்கும் பண்புகள் இதில் அதிகமாக உள்ளதால், பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
கறிவேப்பிலையில், இரும்பு சத்து, போலிக் அமிலமும் அதிகமாக நிறைந்துள்ளது. பாலூட்டும் தாய்மார்களுக்கு ஃபோலிக் அமிலத்தின் பங்கு மிக முக்கியமானது.
ரத்த சோகையை போக்க உதவுகிறது.
எனவே, ரசம், மோரில் கறிவேப்பிலையை ஒதுக்காமல் அப்படியே சாப்பிடும்போது, ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.