நச்சுத் தன்மையை போக்கும் துளசி!
துளசியில் ஆன்டி ஆக்சிடென்ட் அதிகளவில் உள்ளது. தினமும் துளசி இலைகளில் 'டீ' தயாரித்து குடிப்பதால், உடலில் உள்ள நச்சுத் தன்மை வெளியேறுகிறது.
வைரஸ், பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிராக செயல்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
தொழிற்சாலை, வாகனங்களில் இருந்து வெளியேறும் வேதிப் பொருட்கள், கடினமான தாதுக்களின் நச்சுகளில் இருந்து உடல் உள்ளுறுப்புகள், திசுக்களை பாதுகாக்கிறது.
துளசி செடிகளால் உடல் உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்பட்டு புத்துணர்வு பெறுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உடலளவில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
துளசியில் உள்ள பீட்டா கரோடின், செல்களில் ஏற்படும் சிதைவுகளை சரி செய்யும் திறன் கொண்டது.
துளசி சாறை தினமும் குடிப்பதால், போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் அழுத்தத்தையும், அழற்சியையும் குறைக்க உதவுகிறது.
மன அழுத்தத்தை குறைப்பதில் துளசிக்கு பெரும் பங்கு உள்ளது. சுவாசக் கோளாறுகளுக்கும் மிகச் சிறந்த தீர்வாக உள்ளது.