மத்திய ஆசியாவிலும் இனி யு.பி.ஐ., பயன்படுத்தலாம்?

மத்திய ஆசிய நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்திய பயணியர், இனி அங்கும் யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்த முடியும்.

மத்திய ஆசிய மண்டலத்தை மையமாக கொண்டு செயல்படும் நிதி தொழில்நுட்ப கட்டமைப்பான 8பி., பே-யு உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்தியாவின் இணையவழி பணபரிவர்த்தனை தளமான பே-யு உடன் இந்த வசதி கிடைத்துள்ளது.

கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் சுற்றியுள்ள நாடுகளில் செயல்படும் 8பி, அங்குள்ள தனது நிதி கட்டமைப்பை இந்தியாவின் யு.பி.ஐ., உள்ளிட்ட முறைகளுடன் ஒருங்கிணைக்கிறது.

எனவே, யு.பி.ஐ., டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், நெட் பேங்கிங் போன்றவற்றை பயன்படுத்தி அந்த நாடுகளில் இந்திய பயணியர் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

யு.பி.ஐ., போன்ற பழக்கப்பட்ட பணப்பரிமாற்ற முறைகள் வெளிநாடுகளில் கிடைப்பது, இந்திய பயணிகளின் நம்பிக்கையை அதிகரிக்கும்.

இது நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா மற்றும் வர்த்தகத்துக்கு பெரும் பாலமாக அமையவும் வாய்ப்புள்ளது