யுகாதி ஸ்பெஷல் பச்சடி ரெசிபி இதோ!
யுகாதியன்று, வேம்பு-வெல்லக் கலவையை பச்சடி போல செய்து உறவினர்களுக்கு கொடுத்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.
வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில் இவை செய்யப்படும்.
காரணம் இதில் கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய பொருட்கள் இருக்கும்.
பச்சடி செய்ய தேவையான பொருட்கள்: வேப்பம்பூ அரை கப், பச்ச மாங்காய் 1 , புளி கரைசல், பச்சை மிளகாய், இஞ்சி - ஒரு துண்டு, வெல்லம் , உப்பு தேவைக்கு ஏற்ப.
முதலில் வெல்லத்தைத் தூளாக்கவும். புளியை ஊற வைத்து ஒரு டம்ளர் அளவுக்குக் கெட்டியான கரைசலாக்கி கொள்ளவும்.
மாங்காயினைத் தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். பச்சை மிளகாய்களையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெல்லம், புளிக்கரைசல், மாங்காய் துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், வேப்பம்பூ, உப்பு ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து நன்றாகக் கிளறினால் யுகாதி பச்சடி ரெடி.