அல்சர் காரணமாக தொண்டை புண் ஏற்படுமா?

அல்சருக்கும் தொண்டை புண்ணிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

இரவில் தாமதமாக அதிக உணவு சாப்பிட்டு உடனடியாக துாங்கச் செல்லும் போது செரிமானத்திற்காக வயிற்றில் அமிலம் சுரந்து அது உணவுக்குழாய் மூலம் தொண்டைக்கு வந்து சேரும்.

அமிலம் இரைப்பையில் மட்டும் தான் இருக்க வேண்டும். அது தொண்டைக்கு வந்தால் அரிக்க ஆரம்பித்து விடும். தொண்டையில் அரிப்பு ஏற்பட்டு புண் வரும்.

தொண்டையில் தொற்று ஏற்பட்டது என ஆன்டிபயாடிக், வலி நிவாரண மாத்திரை பயன்படுத்தும் போது மீண்டும் அல்சர் அதிகரிக்கும்.

இரைப்பையில் இருந்து அமிலம் கிளம்பி உணவுக்குழாய் மூலம் தொண்டையில் மட்டுமல்ல மூச்சுக்குழாய்க்கும் ஸ்பிரே ஆகும்.

அது நுரையீரலுக்கு சென்று வறட்டு இருமல் ஏற்படும். சிலருக்கு குரலில் கூட மாற்றம் வரும்.

இந்த பிரச்னைகளை தடுக்க இரவில் ஏழு மணிக்குள் சாப்பிடுவது நல்லது. அதுவும் மிதமாக சாப்பிட வேண்டும்.

இரவில் சாப்பிட்டதற்கும் துாங்குவதற்குமான இடைவெளி நேரம் 2 முதல் 3 மணி நேரம் இருக்க வேண்டும்.