சூட்டை தணிக்கும் வெந்தயக்களி
தேவையானப் பொருட்கள்: வெந்தயம் - 0.25 கப், உளுத்தம்பருப்பு, பச்சரிசி - தலா 0.50 கப், நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன், வெல்லப்பாகு - 0.50 கப், பாதாம் பொடி - 1 டீஸ்பூன்.
பச்சரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பை சுத்தம் செய்து, ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
பின், தண்ணீரை வடிகட்டி விட்டு, கிரைண்டரில் மிருதுவாக அரைக்கவும். வெல்லத்தை காய்ச்சி, வடிகட்டி கொள்ளவும்.
அரைத்த மாவை தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து கொண்டு, கனமான பாத்திரத்தில் மாவை விட்டு, காய்ச்சவும்.
அவ்வப்போது நல்லெண்ணெய் விட்டு, கெட்டியானவுடன் அடுப்பை அணைத்து, பாதாம் மிக்ஸை சேர்த்தால் ஆரோக்கியமான வெந்தயக்களி இப்போது ரெடி.
உடல் வெப்பத்தை தணித்து, இடுப்பு, மூட்டுகளுக்கு இது வலிமையை தரக்கூடும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இது உதவுகிறது.