விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... இனிப்பு பிடி கொழுக்கட்டை!
தேவையானப் பொருட்கள்: அரிசி மாவு, தண்ணீர் - தலா 1 கப், வெல்லம் - 0.75 கப், நெய் - 1 டீஸ்பூன், வறுத்த எள்ளு - 1 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் தூள் - 0.50 ஸ்பூன்.
அடுப்பில் கடாயை வைத்து தண்ணீர் ஊற்றி சூடானவுடன், வெல்லத்தைப் போட்டு, நன்றாக கரைத்து வடிகட்டவும்.
பின், அதே கடாயில் அந்த வெல்லக் கரைசலை ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில், நெய், எள்ளு, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
2 நிமிடம் கழித்து வெல்லத்தின் பச்சை வாடை நீங்கிய பின், அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி விழாமல் கலக்கவும்.
அடுப்பை குறைந்த தணலில் வைத்து 3 - 5 நிமிடம் வரை கைவிடாமல் கிளறி, கெட்டியானவுடன் அடுப்பை அணைத்து, மாவை ஆறவிடவும்.
பின்பு, கைப்பொருக்கும் சூட்டில் மாவை கைகளால் கொழுக்கட்டைகளாக பிடிக்கவும்.
இதை, இட்லி தட்டில் வைத்து ஆவியில் 7 - 10 நிமிடங்கள் வரை மிதமான தணலில் வேக வைத்தெடுத்தால், இப்போது, சுவையான இனிப்பு பிடி கொழுக்கட்டை ரெடி.
இந்த கொழுக்கட்டையில் பொட்டுக்கடலை, பாசிப்பருப்பு சேர்த்து செய்தால் சுவை இன்னும் அள்ளும்.