மலச்சிக்கலை போக்கும் நடை... ஆய்வில் தகவல்!
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, தினமும் 45 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டுமென, டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில், மலச்சிக்கல் பிரச்னைக்கு நிவாரணம் கண்டறிவது குறித்து, ஜப்பானின் புஜிதா சுகாதார பல்கலை ஆய்வு மேற்கொண்டது.
இதில், மலச்சிக்கல் பிரச்னை தொடர்பாக, 21 இளைஞர்களிடம் ஆய்வு நடத்தினர்.
இதில் உடற்பயிற்சி துவங்கிய 2 நிமிடத்துக்குள், குடல் ஒலிகள் வலுவாக, அடிக்கடி கேட்கக்கூடிய, நீண்ட நேரம் நீடிக்கக் கூடியதாக மாறின.
இது, குடல் இயக்கம் அதிகரித்திருப்பதைக் குறிக்கிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
எனவே, 20 நிமிட நடைபயிற்சி, குடல் இயக்கத்தை விரைவாக துாண்டி, மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு அளிக்கிறதென, ஆய்வு தெரிவித்துள்ளது.