நம்மிடமே இருக்கு மருந்து - கொய்யாபழம்!
கொய்யாப்பழத்தில், புரோட்டீன்கள், நல்ல கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்தும் அதிகளவு உள்ளன.
கொய்யாப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், பல்வேறு இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றன.
வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளதால், கண் தொடர்பான பிரச்னைகளை சரி செய்கிறது.
முகப்பரு வருவது குறைவதோடு சருமத்தின் அழகும், ஆரோக்கியமும் மேம்படும்.
உடல் பலவீனம், தோல் பிரச்னை, மலச்சிக்கல் போன்றவற்றை போக்கும் ஆற்றல் உடையது, சிகப்பு கொய்யாப்பழம் மற்றும் கொய்யாக்காய்.
இதன் தோலில் அதிகப்படியான புருக்டோஸ் இருப்பதால், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கொய்யாப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது நல்லது.
அதில் உள்ள மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நரம்புகள் மற்றும் தசைகளை,'ரிலாக்ஸ்' செய்து மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கிறது.