தொழுநோய் குறித்து அறிந்ததும் அறியாததும்!!

தொழுநோய் என்பது மைக்கோபாக்டீரியம் லெப்ரே அல்லது மைக்கோபாக்டீரியம் லெப்ரோமாடோசிஸ் ஆகிய பாக்டீரியாவால் ஏற்படும் தோலில் ஏற்படும் தொற்று நோயாகும்.

சாதாரண தேமல் போன்று முதல் கட்டமாக தோலில் வருகிறது. அந்த இடங்களில் முடி வளராமல் இருக்கும்.

உணர்ச்சிகளும் மற்ற இடங்களை காட்டிலும் குறிப்பிட்ட இடத்தில் குறைவாக இருக்கும். இதுபோன்ற அறிகுறிகளை வைத்து தொழுநோய்கள் பரவுவதை கண்டறியலாம்.

முதலில் தோல் பகுதிகளை பாதித்து படிப்படியாக நரம்பு மண்டலத்தை தாக்கும். முழுமையாக பரவியதும் கை,கால்களை செயலிழக்க செய்து மனிதர்களை முடக்கிவிடும்.

இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கினால் முறையாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்ட பின் மெதுவாக குணமடைய முடியும். பாதிப்பு தெரிந்த உடனே தோல் சம்பந்தபட்ட டாக்டர்களை அணுகவேண்டும்.

எல்லாருக்கும் தொழுநோய் எளிதில் பரவுவதில்லை. எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு மட்டும் தான் பரவுகிறது.

பாக்டீரியாவை வெளியேற்றும் அளவிற்கு மக்கள் தங்கள் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். இதற்கு நல்ல காய்கறிகள்,பழங்கள்,புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.