பெண்களுக்கு வரும் புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறி என்ன?
பெண்களில், 50 சதவீத பேருக்கு மார்பகம், கர்ப்பப்பை புற்றுநோய் தான் அதிகம் காணப்படுகிறது.
மீதமுள்ள 50 சதவீதத்தில், வாய் புற்றுநோய், நுரையீரல், சினைப்பை புற்றுநோய், பெருங்குடல் என தலை முதல் கால் வரை எங்கு வேண்டுமானலும் வரலாம்.
பெண்களுக்கு வரும் புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறி ரத்தப்போக்கு.
அதிகப்படியான ரத்தப்போக்கு, மாதவிடாய் அல்லாத நாட்களில் ரத்தபோக்கு, மெனோபாஸ்க்கு பின் ரத்தப்போக்கு ஏற்படுவது கர்ப்பப்பை சார்ந்த புற்றுநோயாக இருக்கலாம்.
புற்றுநோய் பரவிய பின்னர் அதிக எடை இழப்பு, அதிக சோர்வு, அடிவயிற்று பகுதியில் வலியும் அறிகுறிகளே.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை பொறுத்தவரையில் மூன்றாம் நிலை வரை கூட எந்த அறிகுறியும் தெரியாமல் இருக்கலாம்.
எனவே, ஆரோக்கியமாக இருக்கும் போதே குறிப்பிட்ட இடைவெளிகளில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.