கர்ப்ப காலத்தில் முதுகு வலியை சமாளிக்க சில டிப்ஸ் !

வழக்கமான உடல் செயல்பாடு முதுகு மற்றும் கால் தசைகளை வலுப்படுத்தும், நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும். வலியை ஏற்படுத்தாத மென்மையான உடற்பயிற்சிகளை டாக்டரின் ஆலோசனையுடன் முயற்சிக்கலாம்.

ஒருக்களித்து ஒரு பக்கமாக தூங்கும் போது முழங்கால்களை வளைத்து வைக்கவும். இது முழங்கால்களுக்கு இடையில் மற்றும் வயிற்றின் கீழ் தலையணையை வைக்க உதவும்.

அதிக எடையைத் தூக்குவதை முடிந்தளவு தவிர்க்கவும்; கீழேயுள்ள பொருட்களை எடுக்க குனியாமல் நின்றவாறு முழங்கால்களை மட்டும் மடக்கி எடுக்க முயற்சியுங்கள். முதுகை வளைக்காமல் நேராக இருக்க வேண்டும்.

ஹை ஹீல்ஸ் காலணிகளை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். முதுகுவலியை தவிர்க்க சிறப்பு காலணி, மகப்பேறு ஆதரவு பெல்ட் போன்றவற்றை அணியலாம். பெல்ட் அணியும்போது சரியான பொசிஷனில் உட்கார வேண்டும்.

எப்போதும் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். நீண்ட நேரத்துக்கு உட்காருவது, நிற்பதை தவிர்க்க வேண்டும். ஹாட் பேக் அல்லது கூல் பேக் மூலம் முதுகுக்கு ஒத்தடம் கொடுக்கலாம்; 20 நிமிடங்களுக்கு கூடாது.

பிரசவத்துக்கு பின்னர் முதுகுவலி தானாகவே சரியாகிவிடும். கர்ப்ப காலத்தில் இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து முதுகுவலி இருந்தால் டாக்டரிடம் கட்டாயமாக பரிசீலிக்க வேண்டும்.