கர்ப்பிணிகள் குளிர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை என்னென்ன?

கர்ப்பிணிகள் மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம்.

இக்காலங்களில் தாகம் அதிகம் ஏற்படாது. இது அவர்களுக்கு வறட்சியை ஏற்படுத்தி தலைவலி, உடலில் நீர்ச்சத்து குறையும் அபாயம் ஏற்படும். தேவையான அளவு காய்ச்சிய வெந்நீரை குடிக்க வேண்டும்.

தற்போது டெங்கு சீசன் என்பதால் வீட்டைச் சுற்றிலும் நல்ல தண்ணீர் தேங்காதபடி பராமரிக்க வேண்டும்.

எச்.எம்.பி.வி என தற்போது பரவி வரும் ஜலதோஷம், காய்ச்சல் வகை குறித்து எச்சரிக்கை உணர்வு அவசியம்.

லேசான காய்ச்சல் அறிகுறியை மீறி கை கால் வலி, நடுக்கம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடி முதல் கட்ட ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க கர்ப்ப கால மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

கூட்டங்களில் பொதுமக்கள் கூடும் பகுதிகளுக்கு செல்லும்போது முக கவசம் அணிவது அவசியம்.

குளிர்ந்த காற்றினால் தோல் வறட்சி ஏற்படுவதை தவிர்க்க டாக்டர்களின் பரிந்துரை பெயரில் கிரீம்கள் பயன்படுத்தலாம்.

குளிரிலிருந்து பாதுகாக்க தகுந்த ஆடைகளை, கை, கால் உறைகளை அணிவதாலும் சிக்கலை தவிர்க்க முடியும்.