மார்பக புற்றுநோய் வராமல் தவிர்க்க என்ன செய்யலாம்?

பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் 28 சதவீதம் மார்பக புற்றுநோய்தான்.

உடல் பருமன் ஆகாமல் பார்த்துக்கொள்வது, முறையாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது, புகைபிடித்தல், மது அருந்துவதை தவிர்ப்பது புற்றுநோய் வரும் வாய்ப்பை குறைக்கும்.

ஹார்மோன் மாத்திரைகளை அளவோடு டாக்டர் ஆலோசனையுடன் எடுப்பதும் புற்றுநோய் வாய்ப்பை குறைக்க உதவும்.

இதுதவிர, 40 வயதுக்கு பிறகு மாதாமாதம் மார்பக சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக, மாதவிடாய் முடிந்த சில நாட்களிலேயே செய்து கொள்வது நல்லது.

விரல் நுனியில் அல்லாமல் மார்பகத்தை உள்பக்கமாக அழுத்தி பார்த்து ஏதேனும் வித்தியாசமாகவோ, கட்டி மாதிரியோ தெரிந்தால் உடனே டாக்டரை அணுக வேண்டும்.

துவக்க நிலையிலேயே கண்டு பிடித்தால் முழுமையாக குணப்படுத்த முடியும்.

கர்ப்பப்பை வாய்புற்று நோய் போல் இதற்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.