மழைக்கால வைரஸ் காய்ச்சலை தடுக்க என்ன செய்யலாம்?
மழை நீர் மற்றும் கொசுக்கடியால் டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் பரவுகிறது.
வைரஸ் காய்ச்சலை பொறுத்த வரை முதல் மூன்று நாட்களில் அதிக காய்ச்சல், சில மணி நேரம் இடைவெளியில் விட்டு விட்டு வரக்கூடும்.
அப்போது தொடைக்கு மேல் வலி, இடுப்பு வலி ஏற்படும். 4- 5ம் நாளில் உடல் முழுவதும், கண்களைச் சுற்றிலும் வலி ஏற்படும். இதைத் தலைவலி என மக்கள் கூறுவர்.
ஆனால் சற்று காய்ச்சல் குறைந்து காணப்படும். பசி ஏற்பட்டு, உணவு சாப்பிட முடியாததால் நான்காம் நாளில் வலி அதிகரிக்கிறது.
இந்த நாட்களில் கண்டிப்பாக டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
தொடர்ந்து ஆறாம் நாளுக்கு மேல் மீண்டும் காய்ச்சல் அதிகரிக்கும்.
வயிற்றுப்போக்கு, ஈறுகளில் ரத்தக் கசிவு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக அது டெங்கு காய்ச்சலாக இருக்கக்கூடும். இது போன்ற அறிகுறி இருந்தால் டாக்டரை அணுக வேண்டும்.
காய்ச்சல் இருக்கும் போது நீர் ஆகாரங்களாக உப்பு கரைசல், இளநீர், பழச்சாறு உள்ளிட்டவைகளை அதிகம் பருக வேண்டும்.
நீர்ச்சத்து குறைவின்றி பார்த்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.