வல்வோ டெர்மடோசிஸ் :மகளிரை பாதிக்கும் தோல் பிரச்னை
பெண்களின் உடல் ஆரோக்கியம் குறித்து பேசும் போது, பெரும்பாலும் பேசப் படாமல் விடப்படும் ஒரு முக்கியமான பகுதி, வல்வா எனப்படும் பிறப்புறுப்பின் வெளிப்பகுதி.
அப்பகுதியில் ஏற்படும் நீடித்த தோல் பிரச்னைகளான அரிப்பு, எரிச்சல், வலி, சிவத்தல், நிற மாற்றம், புண்கள், தடிப்பு போன்ற பல்வேறு அறிகுறிகளுடன் தோன்றும் தொகுப்பே வல்வோடெர்மடோசிஸ்.
சில பெண்களுக்கு இவை லேசாக இருக்கலாம்; சிலருக்கு தினசரி வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு தீவிரமாக இருக்கலாம்.
தோல் அழற்சி, பூஞ்சை, பாக்டீரியா தொற் றுகள், சோப்பு, திரவ சோப்புகள், சானிட்டரி நாப்கின்கள் போன்றவற்றால் ஏற்படும் எரிச்சல் முக்கிய காரணிகள்.
மேலும் ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம் போன்றவை கூட இப் பிரச்னைக்கு காரணிகளாக இருக்கலாம். அரிதான சில சந்தர்ப்பங்களில் கேன்சரின் அறி குறியாகவும் இது இருக்கலாம்.
பல பெண்கள் இந்த அறிகுறிகளை, 'சாதாரண அரிப்பு' என்று நினைக்கலாம்; கூச்சம் காரணமாக, மருத்துவரை அணுகுவதில் தாமதம் செய்யலாம்.
சிகிச்சை தாமதமானால், நீடித்த வலி, தாம்பத்திய உறவில் சிக்கல், மன அழுத்தம், அன்றாட செயல்பாடுகளில் அசவு கரியம் ஏற்படலாம்.
ஆரம்ப அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல், முறையான மருத்துவ ஆலோசனை பெற்றால், வல்வோ டெர்மடோசிஸ் பாதிப்பை பெரும்பாலும் முழுமையாக குணப்படுத்தலாம்.