இளம் வயதில் பக்கவாதம் வர என்ன காரணம்?
உடலின் அனைத்து முக்கிய உறுப்புகளையும் இணைக்கும் மின் கம்பிகள் போல செயல்பட்டு, தகவல்களை கடத்துவதே நரம்புகளின் முக்கிய வேலை.
மூளையில் ரத்தக்கசிவு, ரத்த ஓட்டம் குறைவு அல்லது ரத்த குழாய் அடைப்பு போன்ற காரணங்களால் தான், ஒருபக்க கை, கால் செயலிழக்கிறது.
இதில், மூளையில் ரத்தக்கசிவு இருந்தால், கடும் தலைவலி, வாந்தி ஏற்படும். இதை அறுவை சிகிச்சை மூலமாகவே சரிப்படுத்த முடியும்.
ஆனால் ரத்தக்குழாய் அடைப்பால் ஏற்பட்ட பக்கவாதமாக இருந்தால், மருந்துகள் மூலமாகவே குணப்படுத்த முடியும்.
ஆனால் இதற்கு அறிகுறி தென்பட்ட முதல் நான்கரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வர வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
புகைப்பிடித்தல், மதுப்பழக்கம், உடல்பருமன், ரத்த அழுத்தம், நீரிழிவு, கொழுப்பு போன்றவை பக்கவாதத்திற்கு முக்கிய காரணிகள்.
இளைஞர்களுக்கு பக்கவாதம் ஏற்பட துரித உணவுகளை அதிகளவில் சாப்பிடுவது, கண்ட நேரத்தில் சாப்பிடுவது, துாக்கமின்மை, உடற்பயிற்சி இன்மை போன்றவை தான் முக்கிய காரணிகள்.