ஆரோக்கிய வாழ்வுக்கான சீக்ரெட் இதுதானுங்க!

தினசரி 20 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை யோகா அல்லது நடைப்பயிற்சி செய்யலாம். காலையில் பயிற்சி எடுத்தால், முழு நாளும் புத்துணர்வு தரும். மாலையிலும் செய்யலாம்.

யோகா ஆசனங்கள், மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் ஆகியவை சீரான ரத்த ஓட்டத்தை வழங்கி, இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.

கலோரிகளை எரித்து வளர்சிதை மாற்றத்தை சீராக்குவதுடன், அதிக உணவு உண்ணும் பழக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது.

இன்சுலின் ஏற்புத்தன்மையை சரிசெய்து, உள்ளுறுப்புகளின் இயக்கத்தை மேம்படுத்த யோகா முக்கிய பங்கு வகிக்கிறது.இதற்கு பிரத்யேக மூட்டுப் பயிற்சிகள் மற்றும் ஆசனங்கள் உள்ளன.

கண் சோர்வைப் போக்க, பார்வைப் பயிற்சிகள் மற்றும் கண் மீது வைக்கும் 'பேக்ஸ்' (Eye packs) நல்ல பலன் தரும்.

30 நிமிடங்களுக்கு ஒருமுறை, 20 நொடிகள் திரையிலிருந்து பார்வையைத் திசைதிருப்பி ஓய்வு தருவது அவசியம்.

சுவைக்காக மட்டுமே சாப்பிடாமல், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவை சாப்பிட வேண்டும்.

இரவில் சரியான நேரத்தில் தூங்கி, காலையில் விழிக்கும் முறையான தூக்கப் பழக்கம் அவசியம்.

ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருக்காமல் அன்றாடம் நடைப்பயிற்சி அல்லது ஏதேனும் உடற்பயிற்சியில் ஈடுபடுதல் அவசியம்.

எந்நிலையிலும் மன அழுத்தமின்றி உள்ளத்தை அமைதியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருத்தல் முக்கியம்.