பெண்களுக்கு ஏற்படும் படர்தாமரையில் இருந்து சமாளிக்க என்ன செய்யலாம்?
கோடைக்காலத்தில் தோலில் ஏற்படும் நோய்களில் முதன்மையானது படர்தாமரை. இது பூஞ்சையினால் ஏற்படக் கூடிய தொற்றாகும்.
உடல்பருமன் உள்ள பெண்களிடம் இது அதிகம் ஏற்படும் என கூறப்படுகிறது. அதிகமாக வியர்ப்பவர்களுக்கும் உடலில் ஈரம் அதிகம் சுரக்கும் இடங்களில் இவை ஏற்படுகின்றன.
பொதுவாக பெண்களுக்கு அக்குள், தொடை, தொடை இடுக்குகள், கால் நகங்கள், கழுத்து மடிப்பு கால் இடுக்குகள், மார்பகங்களின் கீழ் சதை மடிப்புகளில் வரும்.
தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கறுப்பு நிறமாகிவிடும். இப்பிரச்னை அதிக அரிப்பை ஏற்படுத்தும். அதை சொறிந்தால் அதில் வெளியாகும் நீர் மற்ற பாகங்களில் பட்டு பரவக்கூடும்.
படர்தாமரையில் இருந்து விடுபட காலை, இரவு வேளைகளிலும், சுத்தமான நீரில் நன்கு தேய்த்து குளிக்க வேண்டும்.
வியர்வை உள்ள உடைகள், ஏற்கனவே அணிந்த உடைகளை பயன்படுத்தக் கூடாது.
தினமும் துவைத்த துணியை நன்கு வெயிலில் காயவைத்து அணிய வேண்டும்.
படர்தாமரை தீவிரமாக இருந்தால், தோல் நிபுணரை அணுகி பொருத்தமான மருந்துகளை பயன்படுத்தலாம். இவற்றை பின்பற்றினால் படர்தாமரையிலிருந்து பாதுக்காக்க முடியும்.