காதில் இருந்து திரவம் வந்தால் என்னென்ன பாதிப்பு வரும்?

பிறவி குறைப்பாடுகளை தவிர, காதில் சீழ் வடிதலே காது கேளாமைக்கு முக்கிய காரணம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

அடிக்கடி சளி தொந்தரவு இருப்பவர்கள், காதில் தொற்று இருத்தல், அன்னப்பிளவு, தாடை பிளவு பாதிப்பு இருப்பவர்களுக்கு காதில் சீழ் வடியலாம்.

மேலும் விபத்து மற்றும் காது சுத்தப்படுத்த குச்சி, பட்ஸ் பயன்படுத்துவோருக்கு காது சவ்வில் ஓட்டை ஏற்படலாம்.

காதில் சீழ் போன்ற திரவம் வெளியேறுதல், கேட்கும் திறன் குறைதல் போன்ற அறிகுறிகளால் சவ்வு பாதிக்கபட்டிருப்பதை அறியலாம்.

இப்படி சீழ் வருவதை அலட்சியப்படுத்தினால், அங்கு இறந்த தோல் திசுக்களால் ஆன ஒரு கட்டி உருவாகும்.

இது புற்றுநோய் கட்டி அல்ல. ஆனால், அதை சுற்றியுள்ள எலும்புகளை வேகமாக அரித்து அழித்துவிடும்.

முகத்திற்கு வரும் நரம்புகள் பாதிக்கப்பட்டு முக பக்கவாதம் வரலாம். உள்காது சவ்வு பாதிக்கப்பட்டால், மூளையில் தொற்று ஏற்படலாம். எனவே பாதிப்பு இருந்தால் உடனே சிகிச்சை பெறுவது அவசியம்.