தந்தைக்கு மலக்குடல் புற்று நோய் இருந்தால் மகனுக்கும் பாதிப்பு வருமா?
இன்றைய உணவு பழக்க மாற்றத்தால் குடல் சார்ந்த நோய்கள் அதிகரித்துள்ளன. உணவு, மரபியல் ரீதியாக மலக்குடல் புற்று நோய் வர வாய்ப்புள்ளது.
ஏற்கனவே பெற்றோருக்கு மலக்குடல் புற்று நோய் இருந்தால், 30 வயதுக்கு மேல் அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
மலத்தில் ரத்தம் கலந்து செல்வது, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, அடிவயிற்றில் வலி, திடீர் உடல் எடை குறைவு போன்ற அறிகுறிகள் தென்படும்.
தற்போது 30 முதல் 50 வயதிற்குட்பட்டவர்களுக்கு மலக்குடல் புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது.
ஆண்களுக்கு மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்ற காரணங்களாலும் வரும்.
அதிகளவு டீ, காபி குடிக்க கூடாது. நொறுக்கு தீனிகளை தவிர்க்க வேண்டும்.
ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் வைட்டமின் 'சி' உள்ள பழங்கள், நார்ச்சத்து, புரதசத்து உள்ள காய்கறிகள், கீரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடிக்கடி நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். அடிக்கடி வரும் வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உரிய சிகிச்சை எடுக்க வேண்டும்.
ஆரம்பத்தில் புற்று நோய் இருப்பதை கண்டறிந்தால் எளிதாக கட்டுக்குள் கொண்டு வர முடியும்.