இதயத்தை காக்கும் தர்பூசணி... ஆய்வில் தகவல்!
கோடையில் உடலில் நீர்சத்தை தக்க வைப்பதில் தர்பூசணி பழங்கள் உதவுகின்றன.
இதில் நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, ஏ உள்ளிட்ட பல ஊட்டச்சத்துகள் உள்ளன.
குறைந்தளவு கலோரிகள் இருப்பதால் உடல் எடையை கட்டுப்படுத்த இது உதவுகிறது.
சமீபத்தில், தர்பூசணியின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து அமெரிக்காவின் லூசியானா பல்கலை ஆய்வு மேற்கொண்டது.
அதில், அடிக்கடி தர்பூசணி பழங்கள் சாப்பிடுவது இதயம், ரத்த நாளங்களின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது.
பொதுவாக தினசரி உணவில் 2 கப் பழங்கள் இருக்க வேண்டும் என அமெரிக்க சுகாதாரத்துறை வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.