எடை குறைவான குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு என்னென்ன உணவு தரலாம்?

ஒரு சில குழந்தைகள் துருதுருவென இருந்தாலும், எடை குறைவாகவே இருப்பர். இதனால், பெற்றோர் கவலைப்படுவர்; என்ன மாதிரியான உணவுகளை தரலாமென குழப்பமடைவர்.

குழந்தை எடை குறைவாக இருப்பதற்கு இரண்டு காரணங்கள்.

ஒன்று சாப்பாடு குறைவாக எடுத்துக் கொள்வது, மற்றொன்று குடலில் கீரிப்புழுக்கள் இருந்தாலும் எடை கூடாது.

எனவே, 6 மாதத்திற்கு ஒரு முறை டாக்டரிடம் ஆலோசித்து குடல் புழு நீக்க மாத்திரைகளை தரலாம்.

தற்போது வெயில் காலம் துவங்கியுள்ளதால் நல்ல ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும்.

தினமும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

உணவில் தயிர் சேர்க்க வேண்டும். இதனால் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகி பசியை துாண்டும்.

பழங்கள், காய்கறிகளையும் சேர்க்க வேண்டும்.

வாரத்தில் இரு முறை சிக்கன், மீன், மட்டன் கொடுக்க வேண்டும்.

காலை, மாலை பசும்பால் சேர்க்க வேண்டும்.