ஆழ்ந்த தூக்கத்துக்கு இரவில் என்னென்ன உணவுகளைச் சாப்பிடக்கூடாது?

புளிப்பாக இருக்கும் பழங்களைத் தவிர்க்க வேண்டும். அவை செரிமானத்தைத் தடுப்பதுடன், வாயுவுக்கும் வழிவகுக்கும்.

காரம் அதிகமாக இருக்கும் உணவுகளால் நெஞ்செரிச்சல் உண்டாக வாய்ப்புள்ளது.

காஃபி, டீ, சாக்லேட் போன்றவற்றில் காஃபீன் இருப்பதால் அவை ரத்தத்தில் 6 மணி நேரம் வரை கலந்திருக்கும். இது மூளையை விழிப்பாக வைத்திருக்கச் செய்வதால், ஆழ்ந்த தூக்கம் வராது.

எண்ணெயில் பொறித்த உணவுகள் செரிப்பது கடினம் என்பதால் முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.

மது பழக்கமும் ஆழந்த தூக்கத்தை பாதிக்கக்கூடிய ஒன்றாகும்.

தூங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பாக சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் என்பது டாக்டர்களின் அட்வைஸாக உள்ளது.

பால், பாதாம் பருப்பு, வாழைப்பழத்தில் ஆழ்ந்த தூக்கத்துக்கு தேவையான ஹார்மோன்கள் மற்றும் மெக்னீசியம் போன்றவை உள்ளதால், இவற்றை உட்கொள்ளலாம்.