போதியளவு தண்ணீர் குடிக்காவிட்டால் என்னவாகும்?
சரிவர தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் நீர்ச்சத்து குறைந்து, உள்ளுறுப்புகளின் செயல்பாடு குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, சிறுநீரக கற்கள், ஒற்றைத் தலைவலி ஆகியவற்றை தடுக்க உதவுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த சான்பிரான்சிஸ்கோ பல்கலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், குறைந்த ரத்த அழுத்தத்தை தடுக்க உதவும் எனவும் ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற அளவு வைத்து குடிக்க முடியாது. அதற்கு அவசியமும் இல்லை. தாகம் இல்லாமல் தண்ணீர் குடிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.
நம் உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளை கவனித்து, அவரவருக்கு எந்தளவு நீராகாரம் தேவையோ அதை எடுத்துக் கொள்ளலாம்.
உட்கார்ந்து எழுந்திருக்கும் போது தலை சுற்றுவது, தலைவலி, எல்லா நேரமும் அலுப்பாகவே இருப்பது, இதெல்லாம் நீர்ச்சத்து குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகள்.