சீரகத்தண்ணீரை தினமும் குடிப்பதால் என்ன நடக்கும்?

சீரகத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி, கொழுப்பை கரைக்கிறது.

இதில், இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரித்து, ரத்தச்சோகை பாதிப்பை குறைக்கிறது.

சீரகத் தண்ணீரை தொடர்ந்து குடிப்பது ஆரோக்கியமான செரிமான அமைப்பை மேம்படுத்தும்; அஜீரணம், வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்றவற்றை தடுக்கிறது.

உடலிலுள்ள நச்சுகளை நீக்கி சுத்தப்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது; புற்றுநோய் தாக்கத்தை குறைக்கிறது.

இன்சுலின் உற்பத்தியை அதிகரிப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து, டைப் 2 நீரிழிவை கட்டுப்படுத்த உதவுகிறது.

ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பதுடன், ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகளிலிருந்து இதயத்தை காக்கிறது.

இதன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நச்சுக்களை வெளியேற்றுவதால் ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்துக்கு வழிவகுக்கிறது. முகப்பரு, சருமத்தொற்றை தவிர்க்க உதவுகிறது.

சீரகத் தண்ணீரை அதிகமாக சேர்க்கும்போது நெஞ்செரிச்சல் போன்ற பல பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதால், டாக்டரிடம் ஆலோசிக்க வேண்டும்.