புரத உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் என்னவாகும்?

உடலின் அனைத்து வித இயக்கத்துக்கும், ஆற்றலை உற்பத்தி செய்யவும் முதன்மையாக இருப்பது புரதம் தான். ஒரு நாளுக்கு நபருக்கு எவ்வளவு தேவை என்பது அவர்களுடைய உடல் எடையைப் பொருத்தது.

ஒரு நபருக்கு தங்களுடைய உடல் எடையில் 1 கிலோவுக்கு ஒரு கிராம் வீதம் புரதம் தேவைப்படுகிறது. உதாரணமாக 70 கிலோ எடையுள்ள நபருக்கு ஒரு நாளுக்கு 70 கிராம் அளவு புரதம் தேவை.

இந்த அளவிலிருந்து ஒரு சில கிராம் அளவு கூடவோ குறையவே இருக்கலாம். ஆனால் மிக அதிகமாக புரதம் எடுக்கும்போது பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.

உடலுக்குத் தேவையான அளவை விட அதிகமாக புரதங்களை எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை அதிகரிக்கக்கூடும்.

புரதங்கள் அளவுக்கு அதிகமாக உடலில் சேரும்போது அதை ஜீரணிக்க அதிகப்படியான எனர்ஜி தேவைப்படும். இதனால் சிறுநீரகம் அதிக அழுத்தத்துக்கு உட்படும்; செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இறைச்சி வகையிலான புரதங்களை அதிகமாக எடுக்கும்போது அவற்றில் கொழுப்பு சேர்ந்திருப்பதால், இதய நோய் பாதிப்பு ஏற்படக்கூடும்.

உடலுக்குத் தேவையான அளவை விட அதிகப்படியாக புரதங்கள் எடுத்துக் கொள்ளும்போது அது பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

வயிறு வலி, வயிறு உப்பசம் மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளும் உண்டாகக்கூடும்.