மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு இடையிலான வேறுபாடு என்ன?
மன அழுத்தம் (Stress) என்பது தற்காலிகமானது.
சூழல்கள், நாட்கள் கடந்தால் கட்டாயமாக இது குறையும்.
மனச்சோர்வு (Depression) நீண்ட நாட்கள் தொடரும்.
வாழ்க்கையின் மீது ஆர்வம் குறைதல், சோகமாக இருப்பது, தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை இழப்பு போன்றவை அறிகுறிகள்.
மனச்சோர்வு பாதிப்பில் உள்ளவர்களே தற்கொலைக்கு அதிகம் முயற்சி செய்கின்றனர்.
இவ்விரண்டில் இருந்தும் சரியான மருத்துவ உதவிகளுடன் கட்டாயம் விடுபட முடியும்.
மனநோய் என்பது பலவீனம் அல்ல; அந்த நபர் காரணமல்ல.
சூழல்கள், மரபணு, வளர்ப்புமுறை என பல காரணிகள் உள்ளன. இதை பற்றிய புரிதல் அதிகம் தேவை.