வெயிலில் அடிக்கடி அலைவதால் வரும் தலைவலிக்கு தீர்வென்ன?

ஒரு சிலர் வேலை காரணமாக தொடர்ச்சியாக வெயிலில் அலைவர். இவர்களுக்கு அடிக்கடி தலைவலி உண்டாகக்கூடும்.

வெயிலில் தொடர்ந்து அலைவதால் நீர்ச்சத்து குறையும். இதனால், தலைவலி இயல்பாகவே வரும். தவிர மூளை அழுத்தம் அதிகரிக்கும்.

உடல் சோர்வு ஏற்பட்டு வெப்ப நோய்களான ரத்த குழாய் அடைப்பு உள்ளிட்டவைகள் வரக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

எனவே, முடிந்த வரையிலும் வெயிலில் அலைவதை தவிர்க்க வேண்டும்.

எளிதில் செரிமானமாகக் கூடிய உணவு சாப்பிட வேண்டும்.

இயற்கை குளிர்பானங்களான இளநீர், மோர் அருந்த வேண்டும்.

பழங்கள், கஞ்சி, கூழ் சாப்பிடுவது மிகவும் நல்லது.