குழந்தைகளுக்கு நோய் தொற்றை கட்டுப்படுத்த வழி என்ன?

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள குழந்தைகளுக்கு தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தாத போதிலும், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ள குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

பள்ளிக்கு சென்ற சில நாட்களிலே காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.

சாதாரணமாக ஓரிரு நாட்களில் இதுபோன்ற தொந்தரவுகள் சரியாகிவிடும். அந்த நேரத்தில் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலே பாதுகாக்க வேண்டும்.

அதற்கு மேல் தொந்தரவு ஏற்படும் போது மருத்துவரை அணுக வேண்டும்.

பறவை காய்ச்சல் போன்ற தொற்று நோய் ஏற்படும் நேரங்களில் பறவைகள் இறந்து கிடக்கும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

அவர்களுக்கு வாங்கி கொடுக்கும் அசைவ உணவுகளை துாய்மையானதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

நகங்களை வளர்க்கவிடாமல் வெட்டி துாய்மையாக வைக்க வேண்டும்.

இரவு நன்கு துாங்க வைக்க வேண்டும். அலைபேசி பார்த்துக் கொண்டே குழந்தைகளுக்கு உணவு வழங்குவதை தவிர்க்க வேண்டும்.