தினமும் எளிதாகவும், விலை மலிவாகவும் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகளில் ஒன்று கேரட்.

இயற்கையாகவே இனிப்பான சுவை கொண்ட கேரட்டை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவர்.

உடலுக்கு நன்மை சேர்க்கும் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளதால் கேரட்டை சமைப்பதை விட, பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

இதில் அதிகளவில் பொட்டாசியம், நார்ச்சத்துகள் உள்ளன; மலச்சிக்கல் வராமல் தவிர்க்கிறது.

கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்து இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது.

கேரட்டில் அதிகளவில் உள்ள வைட்டமின் ஏ சத்தானது, கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்கிறது.

கேரட்டில் உள்ள சத்துக்கள் உடலின் தோலுக்கு பொலிவைக் கொடுக்கிறது.

குறைவான கலோரி கொண்ட கேரட் ஜூஸை தினசரி குடித்து வந்தால் தொப்பை கொழுப்பை குறைக்க முடியும் என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் அட்வைஸ்.

தினமும் கேரட்டை தவறால் சாப்பிட்டால் மூட்டு வலியில் இருந்து விடுபடலாம். ஏனெனில், இதில் உள்ள வைட்டமின் சி எலும்புகளை வலுவாக்கும்.

ஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து காலையில் குடித்து வர, உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.