எலுமிச்சை டீ எப்போது ஆபத்தாகிறது?
எலுமிச்சை டீ ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. அதில் தேநீரின் ஆன்டிஆக்ஸிடன்டுகளின் நன்மைகளும், எலுமிச்சையின் வைட்டமின் சி சத்தும் உடலுக்கு கிடைக்கிறது.
இதை அளவோடு குடிக்கும்போது பாதுகாப்பானது. ஆனால், தொடர்ந்து அல்லது அளவுக்கு அதிகமாக அருந்துவது சில உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
எலுமிச்சையில் அமிலத்தன்மை அதிகமுள்ளதால், வெறும் வயிற்றில் அடிக்கடி குடித்தால், செரிமான மண்டலத்தைப் பாதித்து நெஞ்செரிச்சல், வயிற்று வலி, அசிடிட்டி பிரச்னைகளை ஏற்படுத்தும்.
இதிலுள்ள சிட்ரிக் அமிலம், பற்களின் பாதுகாப்பு கவசமான எனாமலை படிப்படியாக பலவீனமாக்குவதால், பற்கூச்சம் ஏற்படுவதோடு, எனாமல் அரிப்பு அபாயமும் அதிகரிக்கலாம்.
இதைத் தவிர்க்க, எலுமிச்சை டீ குடித்தவுடன் தண்ணீரால் வாயை நன்றாகக் கொப்பளிக்கவும்.
டீத்துாளிலுள்ள காபின், உடல் நலம் மற்றும் தூக்கத்தைப் பாதிக்கும். மேலும், படபடப்பு, அமைதியின்மை போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
குறிப்பாக, கர்ப்பிணிகள், இதய நோய் உள்ளவர்கள் மற்றும் காபினுக்கு அதிக உணர்திறன் கொண்டவர்கள் எலுமிச்சை டீ குடிக்கும் அளவை கண்காணிக்க வேண்டும்.
பலர் அதிகளவு சர்க்கரை சேர்த்து உட்கொள்ளும்போது, பானத்தின் ஆரோக்கிய நன்மைகள் குறைவதுடன், தேவையற்ற கலோரிகள் அதிகரிக்கக்கூடும்.
அதிக சர்க்கரை உட்கொள்வதால், உடல் எடை அதிகரிப்பு, ரத்த சர்க்கரை அளவு உயர்வு மற்றும் மெட்டபாலிசம் பிரச்னைகள் ஏற்படும் அபாயமுள்ளது.
எலுமிச்சை டீ உடலுக்குப் புத்துணர்ச்சி தந்தாலும், அது குடிநீருக்கு மாற்றாகாது. உடலுக்குத் தேவையான நீரேற்றத்தைப் பெறப் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியமாகும்.
இதை அளவோடு குடிப்பது பாதுகாப்பானது. இதில் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்ப்பதும், வெறும் வயிற்றில் குடிப்பதைக் தவிர்ப்பதும் நல்லது.
இதை குடித்த பிறகு அடிக்கடி நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை மற்றும் வயிற்று அசவுகரியம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், உடனடியாக அதன் அளவைக் குறைப்பது அவசியமாகும்.
ருவேளை இந்த அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெற வேண்டும்.