உண்ணாவிரதம் தரும் மாற்றம் எப்போது?
பொதுவாக தொடர்ந்து சில நாட்கள் உணவு சாப்பிடாமல் இருப்பது, எடை குறைவு உட்பட உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
உலகில் கலாசாரம், ஆன்மிகம் உள்ளிட்ட நிகழ்வுகளில் மக்கள் விரதம் மேற்கொள்கின்றனர்.
மருத்துவத்திலும் உண்ணாவிரதத்திற்கு நீண்ட வரலாறு உள்ளது.
சில உடல்நல பிரச்னையை கையாள இது உதவுகிறது.
இந்நிலையில் ஏழு நாட்கள் உண்ணாவிரதம் குறித்த ஆய்வை லண்டன் குயின்மேரி பல்கலை நடத்தியது.
இதில் உண்ணாவிரதம் தொடங்கிய மூன்று நாட்களுக்குப்பின் தான், உடலில் முக்கியமான மூலக்கூறு மாற்றங்கள் ஏற்படத் துவங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.