குழந்தைகளுக்கு அடிக்கடி உதட்டின் உள் பகுதியில் புண் வருவது ஏன்?

குழந்தைகளுக்கு உதட்டின் உள் பகுதியில் அடிக்கடி புண் வருவது இயல்பானது.

கூர்மையான பற்கள் உரசுவது, உதட்டை கடிப்பது, கடினமான உணவுகளை எடுப்பதால் புண்கள் வரும்.

உணவு வழங்கும் போது பெற்றோர் உடனிருந்து கண்காணிக்க வேண்டும்.

வெயில் காரணமாகவும், வைட்டமின் டி12 குறைபாடு காரணமாகவும் சிலருக்கு புண் வரும். இதனை குளிர்ச்சி மிகுந்த உணவுகள் எடுப்பதன் மூலம் சரிசெய்ய முடியும்.

சில நாட்களுக்கு காரம், புளிப்பு, அதிக உப்பு மற்றும் சூடான உணவுகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.

ஒரே புண் 2 வாரத்துக்கு மேல் நீடித்தால் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

மணத்தக்காளி கீரை, பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு செய்து குழந்தைகளுக்கு வழங்குவது புண்களை விரைவில் ஆற்ற உதவும்.