குடல் ஆரோக்கியத்துக்கு உதவும் சிறு சோளம்

ஆரோக்கியமான குடலுக்கு, சிறுதானியங்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக மலச்சிக்கலுக்கு அருமருந்தாக செயல்படுவது சிறு சோளம்.

இது குடல் ஆரோக்கியத்திற்கு ஆயுர்வேத மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

இதில் பசையம் எனும் குலுடென் (gluten) இல்லை. புரதம், நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் இரும்பு சத்துகள் அதிகமுள்ளன.

இது கோதுமையை விட ஜீரணிக்க எளிதானது மற்றும் கினோவா தானியத்துடன் ஒப்பிடப்படுகிறது.

எனவே, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்னைகள் இருந்தால், கோதுமை மற்றும் மைதாவை தவிர்த்து, இதில் ரொட்டி, தோசை செய்து உண்ணலாம்.