அடிக்கடி காய்ச்சல் வருவதால் குழந்தைகள் சரியாக சாப்பிடாதது ஏன்?
மூன்று வயது குழந்தைகளுக்கு வைரஸ் தொற்றுகளால் அடிக்கடி காய்ச்சல் வரும்.
இந்த வயதில் குழந்தைகளுக்கு சிறிய தொற்றுகள் அதிகமாக வருகிறது. எனவே, பலமுறை காய்ச்சல் வருவது சாதாரணமாக இருக்கலாம்.
ஆனால், காய்ச்சலுடன் சேர்த்து குழந்தை சாப்பிடாமல் இருப்பது, உடல் எடை குறைதல், சோர்வாக இருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் சத்துக்குறைபாடு, செரிமான பிரச்னை காரணமாக இருக்கலாம்.
குழந்தைகளுக்கு பழம், காய்கறி, புரதம் நிறைந்த உணவு வகைகள் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு தினமும் குறைந்தது 1 லிட்டர் வரை தண்ணீர், பால் உள்ளிட்டவை கொடுக்க வேண்டும்.
தடுப்பூசிகளை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும்.
காய்ச்சல் 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக குழந்தை நல மருத்துவரை அணுகி, தேவைப்பட்டால் ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும்.